Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“விவசாயத்திலும் ஏ.ஐ. புரட்சி”: கரூரில் பிரமோஸ் ஏவுகணைத் தந்தை சிவதாணு பிள்ளை அதிரடிப் பேட்டி

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவதாணு பிள்ளை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய புதுமையான அறிவியல் திட்டங்களை சிவதாணு பிள்ளை பார்வையிட்டு, மாணவர்களின் படைப்பாற்றலை பாராட்டினார்.

அப்போது, அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,

தற்போது மேற்காசியாவில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றம் உலக நாடுகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தியா பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளது. நமது நாட்டிடம் உள்ள ‘பிரமோஸ்’ ஏவுகணை, உலகிலேயே அதிவேகமான சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையாகத் திகழ்கிறது. இது இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக்கூடியது. அதேபோல், 5,000 கி.மீ-க்கும் அதிகமான தூரம் பாயும் ‘அக்னி’ ஏவுகணை இந்தியாவின் மிக முக்கியப் பாதுகாப்பு ஆயுதமாகும்.
முன்பு சிந்துார் ஆப்பரேஷனின் போது பாகிஸ்தான் இந்தியாவிடம் சரணடைந்ததற்கு பிரமோஸ் ஏவுகணையின் வலிமையே முக்கியக் காரணமாக இருந்தது. இது சர்வதேச அளவில் இந்தியாவின் பாதுகாப்புத் திறனை பறைசாற்றியது.

விண்வெளித் துறையில் செயற்கைக்கோள்கள் தயாரிப்பில் AI முக்கிய பங்கு வகிக்கிறது.
இஸ்ரோவின் ‘யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையம்’ போன்ற இடங்களில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தி நேரத்தை 25 சதம் குறைக்க முடியும்.
நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கும் ‘நிசார்’ செயற்கைக்கோள் உலகின் மிகச்சிறந்த ரேடார் செயற்கைக்கோளாக இருக்கும், பூமியில் ஏற்படும் 1 செ.மீ மாற்றத்தைக் கூட இதனால் துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.
விவசாயம், வேளாண்மை துறையில், செயற்கைக்கோள் தரவுகளை AI மூலம் பகுப்பாய்வு செய்து, மண்ணின் தரம், உரத்தின் பயன்பாடு மற்றும் நீர் மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்தலாம்.

பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து வரும் மாணவர்கள் பல ஸ்டார்ட்-அப்களைத் தொடங்கி, மொபைல் போன் மூலமே விவசாயத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் இலங்கை நிலப்பரப்பைத் தவிர்க்க ‘டாக்-லெக் மேனுவர்’ (Dog-leg maneuver) என்ற வளைந்த பாதையில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் 30 சதம் எரிபொருள் வீணாகிறது.
ஆனால், குலசேகரப்பட்டினத்தில் அமையும் புதிய விண்வெளி நிலையம் மூலம் ராக்கெட்டுகள் நேரடியாக தெற்கு நோக்கி ஏவ முடியும். இது அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்ல உதவும் என்றார்.

error: Content is protected !!