Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

14 அமைச்சர்களுடன் மோதுவதை தவிர்த்த அதிமுக

தமிழக சட்டசபை தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா., இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.மு.க. 169 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. பா.ஜ.க.வுக்கு 27, பா.ம.க.வுக்கு 18, அ.ம.மு.க.வுக்கு 11, த.மா.கா.வுக்கு 5, இந்திய ஜனநாயக கட்சிக்கு 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு 1, புரட்சி பாரதம் கட்சிக்கு 1 என்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
அதன்படி, 14 தொகுதிகளில் தி.மு.க. அமைச்சர்களை எதிர்த்து போட்டியிடுவதை அ.தி.மு.க. தவிர்த்துள்ளது. அதாவது, அமைச்சர்கள் போட்டியிடும் 14 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது.
அந்த வகையில், அமைச்சர்கள் எ.வ.வேலு (திருவண்ணாமலை), பெரியகருப்பன் (திருப்பத்தூர்), மனோ தங்கராஜ் (பத்மநாபபுரம்), நாசர் (ஆவடி), அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), மதிவேந்தன் (ராசிபுரம்) ஆகியோர் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் தொகுதிகள் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அமைச்சர்கள் கே.என்.நேரு (திருச்சி மேற்கு), டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி), மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை) ஆகியோர் எம்.எல்.ஏ.வாக உள்ள தொகுதிகள் அ.ம.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர்கள் அர.சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்), முத்துசாமி (ஈரோடு மேற்கு), ஆர்.காந்தி (ராணிப்பேட்டை) ஆகியோர் எம்.எல்.ஏ.வாக உள்ள தொகுதிகள் த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அமைச்சர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வாக உள்ள சேலம் வடக்கு தொகுதி பா.ம.க.வுக்கும், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் எம்.எல்.ஏ.வாக உள்ள குன்னம் தொகுதி இந்திய ஜனநாயக கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!