அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சி.வி.சண்முகம் பேட்டி அளித்துள்ளார். பழனிசாமி பொதுச்செயலராக பொறுப்பேற்ற பின் ஒரு தேர்தலில்கூட அதிமுக வெற்றிபெறவில்லை. தேர்தல் தோல்விக்கு மாவட்ட செயலர்களும், பொறுப்பாளர்களும்தான் காரணம் என்கிறார் பழனிசாமி. 47 தொகுதிகள் வெற்றிக்கு பழனிசாமி காரணம் என்றால், 187 தொகுதிகளின் தோல்விக்கு அவர் காரணமா? என்று சி.வி.சண்முகம் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
