Skip to content

கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்தை கண்டித்து அதிமுக போஸ்டர்

கும்பகோணம் என்றாலே மகாமகம் தான் நினைவுக்கு வரும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

இப்படி ஆன்மிக தலமாக விளங்கும் கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இவர்களுக்கு ரெயில் போக்குவரத்தை போல் பஸ் போக்குவரத்தும் வசதியாக இருப்பதற்காக கும்பகோணத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பஸ்கள் வந்து செல்வதற்கு வசதியாக கும்பகோணம் மாநகரின் மையப்பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இங்கிருந்து தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை சென்னை, திருப்பதி, பெங்களூரு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கும்பகோணத்தை சுற்றி உள்ள கோவில்களுக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் கும்பகோணத்திற்கு வந்து செல்கின்றனர்.

அதுமட்டுமின்றி கும்பகோணம் பேருந்து நிலையத்தை சுற்றி ஏராளமான வணிக நிறுவனங்கள், கல்லூரிகள் என பல்வேறு அடிப்படை வசதிகள் உள்ளது.

இதனால் பல்வேறு மக்கள் சிரமம் இன்றி மிகவும் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டு சாக்கோட்டை பகுதிக்கு கொண்டு செல்ல விடியா திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது இதனைக் கண்டிக்கும் விதமாக கும்பகோணம் மாநகரம் முழுவதும் அதிமுக சார்பில்
மாற்றாதே! மாற்றாதே!! குடந்தை பேருந்து நிலையத்தை மாற்றாதே! ஆளுங்கட்சி ஆதாயம் தேட அதிக தூரத்திற்கு மாற்றாதே! புதிய பேருந்து நிலைய இடமாற்றத்தை கண்டிக்கிறோம்…என்ற வாசகங்களுடன் கிழக்கு ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் ஏற்பாட்டில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டதால் தற்போது கும்பகோணம் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!