Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூரில் அஇபுதமமுக வேட்பாளர் மனுதாக்கல்

அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் அரியலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.ராஜ்குமார், தனது வேட்பு மனுவை அரியலூர் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான த. பிரேமியிடம் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள், பல்வேறு அணிகளாக பிரிந்து போட்டியிடும் சூழலில், ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலாவும், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்ம் இணைந்து தனி கூட்டணி அமைத்து, இந்த தே

ர்தலில் களம் காணுகின்றனர். இக்கூட்டணியின் அரியலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், எஸ்.ராஜ்குமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஇபுதமுக வேட்பாளர் எஸ்.ராஜ்குமார், தனது ஆதரவாளர்களுடன் இன்று அரியலூர் நகரில் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து,

பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில், அரியலூர் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான த. பிரேயிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பாளர் ராஜ்குமார் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளார். 1996ல் அஇஅதிமுக வார்டு செயலாளர், தொடர்ந்து நகர பாசறை தலைவர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் கடந்த 9 ஆண்டுகளாக மாநில துணை செயலாளர் பதவி வகித்து வருகிறார். ஜெயங்கொண்டம் இந்திரா நகரில் வசித்து வருகிறார்.

error: Content is protected !!