Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்வு

திருச்சி விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வாக்கு செலுத்துவதற்காக ஏராளமானோர் விமானங்கள் மூலம் சொந்த ஊர் வந்து இருந்தனர்.
அவர்கள் மீண்டும் பணிபுரியும் இடங்களுக்கு விமானங்களில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தபோது, பல மடங்கு உயர்ந்து இருப்பதை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்சியில் இருந்து சென்னைக்கு ரூ.6,459-ம், பெங்களூருக்கு ரூ.6,951-ம், ஐதரபாத்திற்கு ரூ.7.454-ம், மும்பைக்கு ரூ.11, 835ம், புது டெல்லிக்கு ரூ. 15 ஆயிரத்து 550 ஆக கட்டணம் உயர்ந்துள்ளது.

error: Content is protected !!