186 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் இரண்டாவது என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னையில் தரையிறங்கியது. கோலாலம்பூரிலிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு அந்த விமானம் சென்று கொண்டிருந்தது. இந்தக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, முழு அளவிலான அவசரநிலை அறிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 186 பேரில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
