ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த நிகரலாபம், 2026-27 முதலாம் காலாண்டில் ₹8,167 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே Q1-ல் ஈட்டப்பட்ட வருவாயை விட 37.3% அதிகமாகும். இதே காலாண்டில் உலகம் முழுவதும் அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் 1.49 கோடி அதிகரித்து 68.1 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், இதே காலகட்டத்தில் 1,579 மொபைல் டவர்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
