ஆலியா பட், ஷர்வரி, பாபி டியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஆல்பா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியான முதல் வார முடிவில் இப்படம் உலகளவில் ரூ.81 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த ஆக்ஷன்-ஸ்பை திரைப்படம், ஆலியா பட்டின் முதல் ஸ்பை யுனிவர்ஸ் படமாகும். முதல் வாரத்திலும் படத்தின் வசூல் நிலையாக இருந்ததால், அடுத்த வாரங்களிலும் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
