Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அனைத்து பல்கலையிலும் ஒரே நேரத்தில் தேர்வு….. அமைச்சர் பொன்முடி

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்  அமைச்சர் பொன்முடி கூறியதாவது: அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும்.ஒரே தேர்வு , ஒரே நாளில் முடிவு, ஒரே நாளில் உயர் கல்வி சேர்க்கை ஆகிய அனைத்தும் அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வரும்.ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்படும்.முதுகலை மாணவர்சேர்க்கையும் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.  அரசை ஆலோசிக்காமல் கவர்னர் தன்னிச்சையாக செய்லபடுகிறார். கவர்னர் உடனான ஆலோசனையில் பங்கேற்பது துணைவேந்தர்களின் சொந்த விருப்பம். தேசிய கல்வி கொள்கையின் சிறப்பம்சங்களையும் மாநில கொள்கையில் கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!