தவெக தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ் மீது, அரசு வேலை மற்றும் கட்சி பொறுப்புகளை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பண மோசடி செய்ததாக புகார்கள் குவிந்து வருகின்றன. கோயில் அறங்காவலர் பொறுப்பு மற்றும் வழக்கறிஞர் நியமனத்திற்காக 4 நபர்களிடம் தலா ரூ.18 லட்சம் வீதம் பணம் பெற்று ஏமாற்றியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளன. மேலும், இது குறித்து நியாயம் கேட்கும் நபர்கள் மீது போலீசாரை வைத்து பொய் வழக்குப்பதிவு செய்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
தவெக மாவட்ட செயலாளர் மீது பணம் வசூல் புகார்
