Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி…

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால் குற்றால அருவிகளில் குளித்து மகிழ பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றார்.  தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் கடந்த 8-ந் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று முழுவதும் நீடித்த இந்த தடையானது இன்று காலை அருவியில் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். தற்போது கோடை விடுமுறை முடிவுக்கு வந்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!