தனியார் பள்ளி அனுமதி மோசடி புகார் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ், சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி புலனாய்வுத் துறையினர் மனு தாக்கல் செய்திருந்தனர். அம்மனு மீதான விசாரணைக்காக அவர் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், காவல் அனுமதி தொடர்பான நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோசடி வழக்கில் கைதான அன்பில் மகேஷ்: சிறப்பு கோர்ட்டில் ஆஜர்
