Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆந்திரா: கோவில் சுவர் இடிந்து 7 பேர் பலி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது சிம்மாசலம் கோயில். இங்கு சந்தனோத்சவம் திருவிழாவையொட்டி  இன்று அதிகாலையில் இருந்தே  பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது, ரூ.300 கட்டண வரிசையில் பக்தர்கள் நின்றிருந்தபோது, அருகில் இருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

இந்தக் கட்டிட விபத்து குறித்து தகவல் அறிந்த சில நிமிடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறை மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணியை தொடங்கினர். இதில் பலர் மீட்கப்பட்டனர்.

பலத்த காற்று வீசியதில், புதிதாக கட்டப்பட்ட கோயில் சுவர் இடிந்து விழுந்ததாகவும், அந்தச் சுவர் பலவீனமான அடித்தளத்தைக் கொண்டிருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!