Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்…..அண்ணா பொறியியல் கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டம்…

அரியலூர்  விளாங்குடியில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் தற்காலிக பேராசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்காலிக பேராசிரியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பணி நீட்டிப்பு கடிதம் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தற்காலிக பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு கடிதம் வழங்கவில்லை எனவும், இதற்கு கல்லூரி முதல்வர் தான் காரணம் எனவும் குற்றம் சாட்டினர்.

கல்லூரி முதல்வர் செந்தமிழ் செல்வன் மீது பாலியல்  குற்றச்சாட்டு, மற்றும் பல்வேறு புகார்களை கூறிய தற்காலிக பேராசிரியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பணி நீட்டிப்பு கடிதம் வழங்கவில்லை  எனவும்  குற்றம் சாட்டினர்.

பேராசிரியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் கல்லூரி முதல்வர் செந்தமிழ் செல்வனை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கல்லூரியில் பணியாற்றும் தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் நிரந்தர பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!