Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை…பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் திமுகவினர் அண்ணாவின் பிறந்தநாளினை முன்னிட்டு கேணிக்கரையில் உள்ள தந்தை பெரியார் சிலை பகுதியில் இருந்து திமுக நகர செயலாளர் குண்டா மணி செல்வராஜ் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் பேரணியாக பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தனர். அங்கே உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளார் நிவேதா முருகன உட்பட திமுக பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதேபோன்று திமுகவினர் ஊர்வலமாக சென்று செம்பனார் கோயில் கடைவீதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!