சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் உரிமம் பெற்ற வெடிபொருள் கிடங்குகள், பட்டாசு உற்பத்தி நிலையங்கள் மற்றும் பட்டாசு கடைகள் வரும் ஏப்.21, 22, 23, 24 மற்றும் மே.2, 3, 4 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்க வேண்டும். இதனை மீறி செயல்படும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.
