நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இளம்பெண் பெண் கூட்டுப் பாலியல்
வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச்
சம்பவம் டெல்லியின் ராணி பாக் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு
நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பிதாம்புராவில் உள்ள குடிசைப் பகுதியை
சேர்ந்த பெண் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மங்கோல்புரியில் உள்ள ஒரு
தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 12-ம்தேதி இரவு பேருந்தில் வந்த பெண்ணை, பேருந்தின்
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை
செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில்,
டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர்
மற்றும் நடத்துனரை கைது செய்துள்ளனர். மேலும் அந்த சொகுசுப்
பேருந்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவம்
தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை
நடைபெற்று வருகிறது.
2012-ல் மருத்துவ மாணவியை பேருந்துக்குள் வைத்து 6 பேர் பலாத்காரம்
செய்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், அதே போன்ற சம்பவம் மீண்டும்
நடந்துள்ளது.
