தமிழக சட்டப்பேரவையில் இன்று திருக்குறளுடன் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண்மை துறை அமைச்சர் வினோத். வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் வினோத், 2021-க்கு பிறகு ஏ.ஐ, உழவு செயலி ஆகியவை வேளாண்மையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக குறிப்பிட்டார்.
வேளாண்துறை அதிக சவால்களை சந்தித்துள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு 100 சதவீதம் பயிர் காப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ரூ.648 கோடி ஒதுக்கப்ட்டுள்ளது. சூப்பர் எல்நினோவால் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த சூழலில் நீர் பாசன பரப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 38 மாவட்டங்களில் ரூ.648 கோடியில் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்டுகிறது. விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்கு ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். டெல்டா மாவட்டங்களில் ரூ.10 கோடி செலவில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. மேலும் விவசாயிகளின் நலனுக்காக ரூ.4 கோடியில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்படும் என்றார் வேளாண்துறை அமைச்சர்.
