Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் உதவிப் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

கரூரில் உதவிப் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சம்பந்தமாக பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட வருகின்றனர் .

கரூர் தாந்தோணிமலை, வாஞ்சிநாதன் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார். இவர் குளித்தலை காவிரி ஆற்றுப் பிரிவு வடிநிலக் கோட்டத்தில் உதவி பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், தாந்தோணிமலை வாஞ்சிநாதன் தெருவில் உள்ள சுகுமாரின் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜான் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, சுவாமிநாதன் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் இந்தச் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தச் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

error: Content is protected !!