கல்லூரிகளுக்கு இடையிலான நடைபெற்ற வில்வித்தை போட்டி
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன்
திருச்சி செப் 6 –
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக திருச்சி, தஞசை, புதுகை, நாகை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், மற்றும் கரூர் ஆகிய 8 மாவட்டங்களில் இனைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான மாணவ, மாணவியர்களுக்கான வில்வித்தை போட்டி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் 10 கல்லூரிகளிலிருந்து 40க்கும் அதிகாமான மாணவ, மாணவிகள் பங்கேற்ற வில்வித்தை போட்டி இந்தியன், ரிகர்வ் மற்றும் காம்பௌன்ட் ஆகிய பிரிவுகளின் கீழ் நடை பெற்றது.
திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பிரிவில் இந்தியன், ரிகர்வ், காம்பௌன்ட் ஆகிய பிரிவுகளில் முதலிடம் பிடித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கழக கல்லூரிகளின் மண்டலங்களுக்கு இடையிலான வில்வித்தை போட்டியில் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.
மாணவர்கள் பிரிவில் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல், எம்.ஐ.இ.டி. கலை மற்றும் அறிவியல் ஆகிய கல்லூரி அணிகள்
இரண்டாவது இடம் பிடித்தன.
மாணவியர்கள் பிரிவில் இரண்டாவது இடத்தை திருச்சி, உருமு தனலெட்சுமி கல்லூரியும், மூன்றாவது இடத்தை தஞ்சாவூர், மருது பாண்டியர் கல்லூரியும் பிடித்தன.
பட விபரம்,: திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக இனைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான நடைபெற்ற வில்வித்தை போட்டியில் அணி சாம்பியன் பட்டம் பெற்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி.
