Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்.. அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் மனுதாக்கல்

அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிடும்அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தனது வேட்பு மனுவை, அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் த.பிரேமியிடம் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அரியலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் அதிமுகவை சேர்ந்த தாமரை எஸ். ராஜேந்திரன், இன்று அரியலூர் ஒற்றுமை திடலில் இருந்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்களுடன் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக வந்தார். அரியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள, அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், அரியலூர் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான த. பிரேமியிடம், அதிமுக வேட்பாளர் தாமரை எஸ். ராஜேந்திரன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் ஆண்டவன் சாட்சியாக சூளுரைத்து, உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அவருடன் அதிமுக முன்னாள் எம்பி இளவரசன், முன்னாள் எம்எல்ஏ இளவழகன், மற்றும் பாஜக மாவட்ட தலைவர் பரமேஸ்வரி, பாமக மாவட்ட செயலாளர் தமிழ் மறவன், ஆகியோர் உடன் வந்தனர்.

அரியலூர் சட்டப்பேரவை தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அதிமுக தாமரை எஸ்.ராஜேந்திரன்,
கடந்த 1981 முதல் 1991ம் ஆண்டு வரை கிளைக் கழகச் செயலாளராகவும் 1991 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை அம்மா பேரவை ஒன்றிய துணைத் தலைவராகவும் 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை மாவட்ட பிரதிநிதியாகவும் 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் 2006ம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை எம் ஜி ஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளராகவும் 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை எம் ஜி ஆர் மண்ற மாவட்ட செயலாளராகவும் 2014 ஆண்டு முதல் தற்பொழுது வரை அதிமுக அரியலூர் மாவட்ட கழகச் செயலாளராகவும் தொடர்ந்து அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்து வருகிறார். இவரது தந்தை அதிமுகவில் கிளைக்கழக செயலாளராக இருந்துள்ளார்.
2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அரியலூர் தொகுதியில் முதன் முதலாக போட்டியிட்டு திமுக வேட்பாளர் எஸ்எஸ்.சிவசங்கரை விட 2,043 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
இதனையடுத்து, அரசு கொறடாவாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்பும், அரசு கொறடாவாக தொடர்ந்து பதவி வகித்து வந்தார். கடந்த 2021 தேர்தலில் அரியலூர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு 3234 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் வழக்கறிஞர் சின்னப்பாவிடம் தோல்வியை தழுவினார்.
மூன்றாம் முறையாக தற்பொழுது தேர்தலில் போட்டியிடுகிறார்.

error: Content is protected !!