Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் – திமுக அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு..

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெறுகிறது. அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 24 வேட்பாளர்கள் 26 மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்களின் மீதான பரிசீலனை இன்று அருகிலும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அரியலூர் கோட்டாட்சியரும், அரியலூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான த. பிரமி மனுக்களை பரிசீலனை செய்து வெளியிட்டார். இதில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான லதா பாலு (திமுக), தாமரை எஸ்.ராஜேந்திரன் (அஇஅதிமுக),
சிவக்குமார் (தமிழக வெற்றி கழகம் ), புகழேந்தி (நாம் தமிழர் கட்சி ), ஸ்டாலின் (பகுஜன் சமாஜ்), ராஜ்குமார் (அஇபுமமுக), செம்மலை (அய்யா ராமதாஸ் பாமக), சுதாகர் (தமிழக வாழ்வுரிமை கட்சி),
தங்க. சண்முகசுந்தரம் (நாடாளும் மக்கள் கட்சி) ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் சுயேட்ச்சைகளாக வேட்புமனதாக செய்திருந்த ஜோதிபாசு, குமார், வெற்றிவேல்,
இளையராஜா,ஆர். பாலமுருகன், கிருஷ்ணமூர்த்தி, ராஜ்குமார் உள்ளிட்ட ஏழு பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சுயேட்ச்சை வேட்பாளர் களான விஜயகுமார் மற்றும் செல்வபதி ஆகிய இருவரின் மனுக்கள், 10 பேர் முன்மொழிவு இல்லாமல் குறைபாடு இருந்ததால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும் பிரதான கட்சி வேட்பாளர்கள் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதால் அவர்களுக்கு மாற்று வேட்பாளராக தாக்கல் செய்யப்பட்டிருந்த கென்னடி (திமுக மாற்று), கணேசன் (அஇஅதிமுக மாற்று)
காசிநாதன் (நாம் தமிழர் கட்சி மாற்று), சபரி ஆனந்தம் (பகுஜன் சமாஜ் மாற்று ) ஆகிய நான்கு பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதுபோன்று இரண்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்த அதிமுக வேட்பாளர் தாமரை. ராஜேந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சி புகழேந்தி ஆகியோரின் முதல் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால், இரண்டாவது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் தமிழக வெற்றி கழகத்தின் மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த
ஈஸ்வரி மற்றும் அய்யா பாமக மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த த. ராஜேந்திரன் ஆகியோரின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும், அவர்கள் சுயேட்ச்சை வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவர்களும் தற்பொழுது வேட்பாளராக களத்தில் உள்ளனர்.

வேட்பு மனு பரிசீலனை இறுதியில் 26 மனுக்களில்
8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 18 வேட்பாளர்கள் தற்பொழுது களத்தில் உள்ளனர். வருகிற ஒன்பதாம் தேதி மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுவை வாபஸ் செய்து கொள்ள இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!