Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்…. பெண்ணிடம் 5 பவுன் தாலி செயினை பறித்த மர்ம ஆசாமிகள்..

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமித்திரா (வயது-43) இவர் ஆண்டிமடம்- விருத்தாச்சலம் சாலையில் சூரக்குழி கிராமம் பஸ் நிறுத்தம் அருகே வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அவரது கடையில் அமர்ந்து வியாபாரத்தை மேற்கொண்டு வந்தார். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களில் 1 நபர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு மற்றொருவர் சுமித்ரா கடைக்குச் சென்று சிகரெட் கேட்டுள்ளார் சுமித்ரா சிகரெட் எடுத்து கொடுக்கும் சிறிது நேரத்தில் சிகரெட் வாங்க வந்த வாலிபர் சுமித்ரா அணிந்திருந்த தாலி செயினை அறுத்துக் கொண்டு 2 நபர்களும் சூரக்குழியில் இருந்து ஆண்டிமடம் நோக்கி சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும்

சுமித்ரா தாலி செயின், தாலி, குண்டு, காசு, உட்பட மொத்தம் 5 பவுன் எனக் கூறப்படுகிறது. இது குறித்து சுமித்ரா ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் முன்னாள் அமர்ந்திருந்தவர் ஹெல்மெட் அணிந்து இருந்ததாகவும் ஆரஞ்சு கலர் டி-ஷர்ட் அணிந்திருந்ததாகவும் பின்னால் இருந்தவர் கருநீல டி-ஷர்ட் அணிந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது போலீசார் மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர். பெட்டிக்கடையில் இருந்தவரிடம் செயின் பறித்துச் சென்றது அப்பகுதியின் பொது மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!