Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் அருகே அரசு பள்ளியில் சிறுகதை பயிலரங்கம்…

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த இனிய நிகழ்விற்கு பள்ளித் தலைமையாசிரியர் மே.குமணன் தலைமை தாங்கினார். கவிஞரும் எழுத்தாளருமான சிவ விஜயபாரதி “மாணவர்கள் மாண்புமிக்கவர்களே”என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ்க்கூடல் நிகழ்வின் ஒரு பகுதியாக படைப்பாற்றல் திறனும் எழுத்தார்வமும் உள்ள மாணவர்களுக்குச் சிறுகதைப் பயிலரங்கம் நடத்தப்பட்டது. முன்னதாக விழாவிற்கு வந்திருந்தவர்களை உதவித் தலைமையாசிரியர் மூ.சுரேஷ்குமார் வரவேற்றுப் பேசினார். பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியர் பி.ஜெயப்பிரியா நன்றியுரையாற்றினார். தமிழ்க்கூடல் நிகழ்வுகள் அனைத்தையும் ஆசிரியர் மெ.பாஸ்டின் சர்ச்சில்,மற்றும் ஆசிரியர்கள், தமிழ் இலக்கிய மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக ஒருங்கமைத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!