Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்… நாதக வேட்பாளர் மனுதாக்கல்

தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள புகழேந்தி தனது வேட்பு மனுவை அரியலூர் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான த.பிரேமியிடம் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து இன்று தமிழக முழுவதும் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு அரியலூர் கோட்டாட்சியர் த. பிரேமி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் புகழேந்தி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

நாம் தமிழர் கட்சியின் அரியலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் தே.புகழேந்தி, அரியலூர் மாவட்டம், கீழக்காங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர். இளம் வேட்பாளரான இவர் தொழிற்கல்வி முடித்திருக்கிறார். தற்போது தொழில் முனைவோராகவும் இருக்கிறார்.

இவர் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். 2016 ஆம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியில் பயணித்து வருகிறார். 2022ஆம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறையினுடைய மாநில செய்தித் தொடர்பாளராகச் செயல்பட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகக் குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார்.

error: Content is protected !!