Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராக்கெட் விடும் கனவை நினைவாக்கிய மகன்…. அரியலூரில் தாய், தந்தை பெருமிதம்…

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள அய்யப்பன் நாயக்கம் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வதுரை மகன் சண்முக சுந்தரம். இவர் அரசு பள்ளியில் பயின்றவர். இன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி 56 இல் 7 ராக்கெட்டுகள் விண்வெளியில் செலுத்தப்பட்டது.

அதில் மூன்று ராக்கெட்டுகளை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அய்யப்பன் நாயக்கன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சண்முகசுந்தரம் தந்தை செல்வதுரை, தாய் அறிவழகி கூறுகையில் எனது மகன் சிறுவயதில் இருந்தே ராக்கெட் விட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். ஆகையால் படிப்பதிலும் ஆர்வத்துடன் படித்தார். இதன் மூலம் சென்னை

இந்துஸ்தான் யுனிவர்சிட்டியில் ஏரோனாட்டிக் இன்ஜினியரிங் பயின்றார். இதனைத்தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் இது குறித்து பயிற்சி பெற்றார்.

இந்நிலையில் அவர் தயாரித்த செய்ற்கை கோள் வின்னில் செலுத்தப்பட்டது.இதன் மூலம் அவரது சிறு வயது கனவை நினைவாக்கினார். இது எங்களுக்கு மட்டும் இன்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாக என தாய், தந்தை பொருமிதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!