நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு- தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக வழக்கு
அரியலூர் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை

ஆதரித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், அரியலூர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் நடத்தை

விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கியை பயன்படுத்தி, அதன் மூலம் பரப்புரையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம், அரியலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் புகழேந்தி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ரேவதி, குன்னம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கீர்த்திவாசன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சுகன்யா ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
