Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூரில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 – 2024 கீழ்,
1). பானா தெருவில், ரூபாய் 16.50 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி,
2). கணபதி நகர் 2-வது தெருவில், ரூபாய் 8.00 இலட்சம் மதிப்பீட்டில் சிறு பாலத்துடன் கூடிய மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி,
3).கீழத்தெரு ஆதிதிராவிடர் காலனி வடக்கு தெருவில், ரூபாய் 6.50 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்தல், ஆகிய பணிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.


இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் அசோக்குமார், நகர் மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், துணை தலைவர் வெ.கொ.கருணாநிதி, நகராட்சி பொறியாளர்(பொ) விஜயகார்த்தி, நகராட்சி மேலாளர் அன்புச்செல்வி, நகராட்சி பணி மேற்பார்வையாளர் பூபதி, நகர்மன்ற உறுப்பினர்கள், நகர கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!