Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்-குடிநீருக்காக கிணற்றை தூர்வாரிய இளைஞர்கள்

மக்களுக்காக களத்தில் இறங்கிய இளைஞர்களை பாராட்டும் பொதுமக்கள்

அரியலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் மற்றும் வேப்ப அலை வீசிவருகிறது. இதனால் போர்வெல் நீர்மட்டம் குறைந்து குடிநீர் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதனால் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது

இந்நிலையில் ஜெயங்கொண்டம் அருகே அமைந்துள்ள சூரிய மணல் வடக்கு தெருவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட கிணற்று நீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர் இந்நிலையில்

கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் குழாய் மூலம் வழங்கப்பட்டு வருவதால் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்ட கிணறு பயன்பாடு இல்லாமல் குப்பைகள் கொட்டப்பட்டு தூர்ந்து காணப்பட்டதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மனவேதனை அடைந்தனர். கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய கிணறு இன்று தண்ணீர் இன்றி கிடப்பதைக் கண்ட இளைஞர்கள் உடனடியாக குடிநீருக்காக கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அரசு மற்றும் யாருடைய உதவியும் இன்றி கிராம இளைஞர்கள் தாமாக முன்வந்து கிணற்றை தூர்வாரும் பணியை தொடங்கி உள்ளனர். இந்த கிணறு முழுமையாக தூர் வாரும் பட்சத்தில் அப்பகுதியை சேர்ந்த கிராமங்களுக்கு குடிநீர் பிரச்சனையே இருக்காது என கூறப்படுகிறது

இளைஞர்களின் தன்னலமற்ற சேவையினை அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

error: Content is protected !!