Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்….கோடை வெயில்… அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

அரியலூர் மாவட்டத்தில் கோடை வெயிலை பொதுமக்கள் சமாளிக்கவும், கோடை வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் அதிமுக சார்பில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மோர், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்களையும், பழங்களையும் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அரியலூர் பேருந்து நிலையம் அருகில், அதிமுக

சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை, முன்னாள் அரசு தலைமை கொறடாவும், அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளருமான தாமரை. ராஜேந்திரன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், பானகம், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பானங்களையும், பழங்களையும் வழங்கினார். இதேபோல் அரியலூர் புறவழிச்சாலையில் உள்ள செந்துறை ரவுண்டானா அருகில், அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இளவழகன், அரியலூர் நகரச் செயலாளர் செந்தில் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!