சென்னையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அர்ஜூன் பல்லக்கு தூக்கும் வீடியோ SM-ல் வெளியாகியுள்ளது. அவரே கட்டியுள்ள இக்கோயிலின் ஆண்டு விழாவை முன்னிட்டு தனது மருமகனுடன் சேர்ந்து காவி உடையில், பக்திப் பரவசத்துடன் வழிபட்டார். இக்கோயிலில் ஒற்றைக்கல்லில் வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலை உள்ளது. தனது மிகுந்த பக்தியின் வெளிப்பாடாகவே இக்கோயிலை தான் அமைத்ததாக அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
