சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த தனிப்படை போலீஸாரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் சிக்க வைப்பதாக தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பெற்றதாக புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்த நிலையில் வேறு யாரும் மிரட்டப்பட்டுள்ளனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
