நாட்டுக்காக இரவு பகலாக சேவையாற்றும் ராணுவ வீரர்களின் மரணம் எப்போதும் பேரிழப்புதான். பாட்னாவை சேர்ந்த அரவிந்த் குமார் என்ற ராணுவ வீரர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய போது சாலை விபத்தில் சிக்கினார். ஹாஸ்பிடலில் 6 நாள்கள் தீவிர சிகிச்சையில் இருந்த அவரை டாக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை. எல்லையில் எதிரிகளுடன் போராடிய வீரரின் உயிரை சாலை விபத்து பறித்துக்கொண்டது பெரும் துயரம்.
