Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டுவரி நிர்ணயம் செய்ய ரூ. 15000 லஞ்சம்- பஞ்சாயத்து செயலாளர் கைது

திருச்சியில் வீட்டுவரி நிர்ணயம் செய்ய ரூ. 15000 லஞ்சம்-கைது

திருச்சி மாவட்டம், பனையக்குறிச்சி கார்திகேயன் தனது அக்கா கணவர் கிராமத்தைச் சேர்ந்த புகார்தாரர் அருண்குமார் என்பவருக்காக பனையக்குறிச்சி கிராமம், கிருஷ்ணா கார்டன், ARK நகரில் கட்டிவந்த வீட்டிற்கு, வீட்டுவரி நிர்ணயம் செய்து தரக்கோரி பனையக்குறிச்சி பஞ்சாயத்து செயலாளர் மாரியப்பனை அனுகியுள்ளார். அப்போது, ரூ.25,000 லஞ்சம் கேட்டுள்ளார். இல்லையெனில் ரூ.15,000ஆக குறைத்து கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்திகேயன் 23.06.2026ந்தேதி திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று 23.06.2026ந்தேதி துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் .பிரசன்ன

வெங்கடேஷ், சக்திவேல் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது பனையக்குறிச்சி பஞ்சாயத்து செயலாளர் மாரியப்பன் லஞ்சப்பணம் ரூ.15,000த்தை கார்த்திகேயனிடமிருந்து கேட்டு பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஊழல் தடுப்பு போலீசார் மாரியப்பனை கைது செய்தனர். இது தொடர்பாக திருச்சி மாவட்டம், பனையக்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!