Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சட்டமன்ற கூட்டம் இன்றுடன் நிறைவு

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி  தொடங்கியது.  கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து கடந்த 15-ம் தேதி சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இந்த நிலையில் சட்டப்பேரவையில் கடந்த 19-ம் தேதி 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது . நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஏராளமான புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 20-ம் தேதி 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது இந்த பட்ஜெட் உரையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பல்வேறு வேளாண் சார்ந்த அறிவிப்புகள் மற்றும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இன்றைய கூட்டத்தில் பொது பட்ஜெட் , வேளாண் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!