தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் – 2026, 23 ஏப்ரல் 2026 அன்று (வியாழக்கிழமை) ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால் அதை தொடர்ந்து திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரான ஐ. பெரியசாமியிடம் செய்தியாளர் மக்களிடையே வரவேற்பு எப்படியுள்ளது எனவும் கடந்த முறை தமிழ்நாட்டிலே அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை நிலை என்னவென்று கேட்டார்.
அதற்கு ஐ.பெரியசாமி எப்பொழுதும் போல வரவேற்பு நன்றாக உள்ளது, களத்தில் புதிதாக வந்துள்ள கட்சி எவ்வளவு வாக்கு பெறும் என்பதை கணிக்க முடியவில்லை ஆனால் திமுகவே மீண்டும் வெற்றி பெறும், திமுகவின் வெற்றி பிரகாசமாகவுள்ளது எனவும் கூறினார்.
ஆத்தூர் தொகுதி மக்களிடம் திமுகவிற்கு அதிக வரவேற்பு, குறிப்பாக ஆத்தூர் பெண்களுக்கு முதலமைச்சர் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. திமுக ஆட்சி 2ஆவது முறையாக தொடர உள்ளது. வெற்றிவாய்ப்பு திமுகவிற்க்கே அதற்கு முக்கியக் காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே என்றார்.
எப்போதும் கிடைக்காத திட்டங்கள், வரலாற்று திட்டங்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கிடைக்க போகின்றது. குளங்களுக்கு தண்ணீர் நிரப்புவது, குடிநீர் திட்டத்திற்கு முழுமையாக தீர்வுகாண்பது, வைகை அணையிலிருந்து நேரடியாக தண்ணீர் கொண்டுவரும் திட்டதின் பணிகள் தொடங்க இருக்கிறது என குறிப்பிட்டார் .
