மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறு வரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் தோல்வி அடைந்ததன் எதிரொலி – கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களுக்கும் ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்த மசோதாக்கள் வெற்றி பெற மூன்றில் 2 பங்கு வாக்குகள் ஆதரவாக தேவை. தொகுதி

மறுவரையறை மசோதா நிறைவேற 326 வாக்குகள் தேவை. அது கிடைக்காத காரணத்தால், மூன்று மசோதாக்களும் தோல்வி அடைந்தன.
தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட 3 மசோதாக்களும் மக்களவையில் தோல்வியடைந்ததை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார். இதனை அடுத்து திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட திமுக சார்பில் கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் மாநகர செயலாளர் கனகராஜ், துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
