Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடந்து சென்றவரிடம் அரிவாள் முனையில் பணம் பறிக்க முயற்சி

திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட திம்மராஜபுரம், கோட்டூர் பகுதியைச் சேர்ந்த காந்தி மகன் மாரியப்பன் (47), வண்ணாரப்பேட்டையில் ஒரு தனியார் ஓட்டல் எதிரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாஸ்கர்(37) என்பவர் மாரியப்பனை வழிமறித்து அவரது சட்டைப்பையில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதற்கு மாரியப்பன் எதிர்ப்பு தெரிவித்ததால், பாஸ்கர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாரியப்பனை தாக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

error: Content is protected !!