சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் நேற்று (நவ.26) நள்ளிரவு மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளியை மர்ம நபர்கள் கல்லால் தாக்கியுள்ளனர். மேலும், அருகிலுள்ள செல்போன் கடையிலும் கொள்ளையடிக்க முயன்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அங்கிருந்த காவலாளியையும் மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
