வடகிழக்கு பருவமழை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் கனமழையால், தென்காசி குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாதுகாப்பு வளைவைத் தாண்டித் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று காலை முதல் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு, அருவிக்கரையில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து சீரான பிறகே மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை விதிப்பு
