பஞ்சாபின் அபோஹரில், சாலையில் இருந்த பள்ளங்களால் ஏற்பட்ட விபத்தில் 4 வயது குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். வேகமாக வந்த பிக்கப் டிரக் சாலையில் இருந்த பள்ளம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த இ-ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில், ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது. அதில் பயணித்த 3 பேரும் தூக்கி எறியப்பட்டனர். இந்த கோர விபத்தின் CCTV காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
