திருச்சி மாநகராட்சி மற்றும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி மற்றும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி திருச்சி மாநகராட்சி அருகே துவங்கி நடைபெற்றது. இந்த பேரணியை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த இருசக்கர வாகன பேரணியில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும், சூடான பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் வாங்க கூடாது என்பதனை வலியுறுத்தும் விதமாக இந்தப் பேரணி நடைபெற்றது. கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். இந்த பேரணி திருச்சி மாநகராட்சியில் இருந்து துவங்கி பாலக்கரை, சத்திரம் பேருந்து நிலையம் வழியாக திருச்சி நீதிமன்றம் வந்தடைந்து, இறுதியாக திருச்சி மாநகராட்சியில் முடிவடைகிறது.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்டுமான பொறியாளர்கள் சங்க தலைவர் விஸ்வநாத் கூறும்போது..,
பிளாஸ்டிக் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்களை நோக்கம் அதனை வலியுறுத்தி இன்று இந்த விழிப்புணர்வு பேரணையானது நடைபெற உள்ளது பல்வேறு முயற்சிகளுக்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது இந்த ஆட்சியில் கட்டுமான தொழிலாளர்களுக்கான முன்னெடுப்புகள் வேகமாக செயல்படுத்த தமிழக அரசு உடன் நிற்கிறது என கூறினார்.
