Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது நாச்சியார்பேட்டை மேடு கிராமம். இக்கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன் மனைவி பூங்காவனம் (70). மூதாட்டியான இவர் நேற்று காலை மேப்புலியூர் கிராமத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற வந்தேபாரத் ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பூங்காவனம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சென்ற விருத்தாசலம் ரயில்வே போலீசார், உயிரிழந்த பூங்காவனத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது வந்தேபாரத் ரயில் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!