Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் போராட்டம் அறிவித்த அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைப்பு

சென்னையில் போராட்டம் அறிவித்த அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில்

சென்னையில் போராட்டம் அறிவித்த விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைப்பு – போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் சென்னை செல்ல அனுமதி.

தமிழக விவசாயிகள் வங்கிகளில் பெற்ற அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்,
உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுப்படி, தமிழகத்திற்குரிய காவிரி நீரைத் திறக்காத கர்நாடக அரசைக் கண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சென்னை தலைமைச் செயலகம் முன்பு இன்று போராட்டம் அறிவித்திருந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளை வீட்டுக்காவலில் வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையின் உயர் அதிகாரிகள் அய்யாக்கண்ணுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையின் முடிவில், அய்யாக்கண்ணு உட்பட நான்கு பேர் மட்டும் சென்னை சென்று முதல்வரிடம் மனு அளிக்க காவல்துறையினர் அனுமதி வழங்கினர்.

இதுகுறித்து அய்யாக்கண்ணு செய்தியார்களிடம் பேசுகையில்:–

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு நியாயமான விலையை வழங்காததால், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். வங்கிகளில் வாங்கிய கடன்களைக் கட்ட முடியாமல் அவதிப்படும் விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் மாநில அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யை இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

error: Content is protected !!