Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாக்டரை மிரட்டி லஞ்சம்……. ED அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன்

மத்திய அமலாக்கத்துறை அதிகாரி மதுரை அங்கித் திவாரி,  திண்டுக்கல் டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.  அவருக்கு  திண்டுக்கல் செசன்ஸ் கோர்ட்,  சென்னை ஐகோர்ட்  ஜாமீன் வழங்க மறுத்தது. இந்த நிலையில் அங்கித் திவாரி  உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி  இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அங்கித் தி்வாரி சாட்சிகளை கலைக்க கூடாது.  தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்ற நிபந்தனையும்  விதித்து உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!