Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை……..குடுமியான்மலையில் மிக அதிக மழை….வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. தமிழ்நாட்டில்  கடந்த 24 மணி நேரத்தில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது.  குறிப்பாக  புதுக்கோட்டை மாவட்டம்  குடுமியான்மலையில் மிக அதிகமாக 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.  சென்னையில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும்.  வடகிழககு பருவமழை  தற்போது வரை இயல்பை விட 84% அதிகமாக பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு கனமழை பெய்யும்.  தஞ்சை, மயிலாடுதுை, அரியலூா் உள்பட 12 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  தர்மபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில்நாளை கனமழை பெய்யும். அடுத்த 4 தினங்களுக்கு புதுவை,காரைக்கால், தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்யும்.

மேற்கண்ட தகவலை   தென்மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலசந்திரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!