Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்- திருச்சி புதிய கலெக்டர் சரவணன்

திருச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய பிரதீப்குமார் பேரூராட்சிகளின் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய சரவணன் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து  சரவணன் இன்று திருச்சி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய கலெக்டர் சரவணனுக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட  சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது: பொது மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் குறைகளை தீர்க்க பாடுபடுவேன் .குறிப்பாக பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளைஅதிகாரிகளிடம் பொதுமக்கள் எந்தவித தயக்கம் இன்றி தெரிவிக்க வேண்டும்.உங்களுக்கு சேவை செய்ய தான் நாங்கள் இருக்கிறோம். என்னை எளிதாக தொடர்பு கொண்டு  குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் சரவணன் தெரிவித்தார்.  
error: Content is protected !!