ஆன்லைனில் ஆர்டர் செய்த கோழிக்கறி கெட்டுப்போய் இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள KFC உணவகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். K.S. ராவ் சாலையில் உள்ள சிட்டி சென்டர் வளாகத்தில் செயல்பட்டு வரும் KFC கிளையில் இந்த சோதனை நடைபெற்றது. தொடர்ந்து உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனை சீல் வைத்தனர். உணவுப் பொருட்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன
