Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்டாகத்தியால் கேக் வெட்டி வீடியோ வெளியீடு… தஞ்சை பிரமுகர் கைது

தஞ்சை அடுத்த மாரியம்மன்கோவிலை சேர்ந்தவர் பஞ்சநாதன் மகன் சாய்ரகு (39). இவர் இந்து எழுச்சி பேரவையில் தஞ்சை மாநகர மாவட்ட தலைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று தஞ்சை- நாகை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து

பட்டா கத்தியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று சாய்ரகுவை கைது செய்தனர். இந்த சம்பவம்  தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!